தென்பகுதியில் இருந்து வவுனியாவிற்குள் நுழைபவர்களை வழி மறித்து பிசீஆர் பரிசோதனை
தென்பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்தவர்களை ஏ9 பிரதான நுழைவாயிலில் பொலிஸாருடன் இணைந்து வழிமறித்த சுகாதாரப் பிரிவினர் அவர்களிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக தென்பகுதியில் இரவு வேளைகளில் வவுனியாவிற்கு வருபர்களை வவுனியா ஏ9 வீதி நுழைவாயிலான மூன்றுமுறிப்பு பகுதியில் வழிமறித்த சுகாதாரப் பிரிவினர் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 வரை பிசீஆர் பரிசோதனை முன்னெடுத்துள்ளனர்.
டெல்டா வைரஸ் தாக்கம் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருவதையடுத்து, அதனை வவுனியா மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்காக வியாபார நோக்கம், அலுலக தேவை போன்றவற்றிகாக வவுனியா மாவட்டத்தினுள் நுழையும் வாகனங்களில் பயணிப்போர் மற்றும் வவுனியா ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு செல்பவர்கள் என 300 இற்கும் மேற்பட்டவர்களுக்கு இவ்வாறு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களின் பிசீஆர் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.





ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
