வவுனியாவிற்கு எதிர்வரும் மாதம் பிசீஆர் இயந்திரம் கிடைக்கும்! - திலீபன்
வவுனியா மாவட்டத்திற்கு எதிர்வரும் யூலை மாதம் பிசீஆர் இயந்திரம் கிடைக்கும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
இன்று (22.06) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோர் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை சந்தித்து கலந்துரையாடினார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சரை எனது கட்சி தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து சந்தித்து கலந்துரையாடினோம்.
இதன்போது வவுனியா மாவட்டத்திற்கு பிசீஆர் இயந்திரத்தின் அவசர தேவை குறித்து மீண்டும் வலியுறுத்தினோம்.
இதனையடுத்து அதிகாரிகளை தொடர்பு கொண்ட சுகாதார அமைச்சர் உடனடியாக வவுனியாவிற்கு பிசீஆர் இயந்திரத்தை வழங்குமாறு பணிப்புரை விடுத்தார்.
அந்தவகையில் வரும் யூலை மாதத்திற்குள் பிசீஆர் இயந்திரம் வழங்கப்படும் என எம்மிடம் உறுதியளித்துள்ளார்.
ஏற்கனவே, எமது கோரிக்கையை ஏற்று வவுனியா வைத்தியசாலைக்கு அதிகாரிகளை அனுப்பி அங்குள்ள நிலமைகளை பார்வையிட்டுள்ளதாகவும், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் பிசீஆர்
இயந்திரம் பெற்றுக் கொள்வதன் மூலம் சுகாதாரப் பிரிவினர் எதிர்நோக்கிய பாரிய
பிரச்சனை ஒன்று முடிவுக்கு வருவதுடன், மக்களுக்கும் பிசீஆர் முடிவுகள்
உடனுக்குடன் கிடைப்பதற்கும் வழிவகுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு வழிசமைத்த
அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam