எரிபொருள் கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியவில்லை! இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
எரிபொருள் கப்பல்களுக்கான பணம்
எரிபொருள் கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் மேலும், இலங்கைக் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்களுக்கு டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்த முடியவில்லை.
மூன்று வாரங்களுக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் ஒரு கச்சா எண்ணெய் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பலுக்கான பணத்தை இலங்கை இன்னும் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டொலர்களை பெற்றுக் கொள்ள கலந்துரையாடல்
இதேவேளை டீசல் ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், கப்பல்களுக்கு பணம் செலுத்துவதற்கு தேவையான டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.