கொரியத் தூதுவருடன் பவித்ரா அவசர பேச்சு
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றைச் சமாளிப்பதில் கொரிய சுகாதாரத்துறையின் ஆதரவு குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் வூன்ஜின் ஜியோங் ஆகியோருக்கு இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின்போது,
கோவிட் தொற்று நோயைக் கையாள்வதில் தென் கொரிய அரசு பயன்படுத்திய வழிமுறைகள் மற்றும் இலங்கையிலும் கோவிட் பரவுவதைக் குறைப்பதில் தென்கொரியாவின் அணுகுமுறையை எவ்வாறு கையாளலாம் என்பது குறித்து தூதர் சுகாதார அமைச்சருக்கு விளக்கிக் கூறியுள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு குறித்து கொரிய அரசு
இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக
ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசு சார்பாக நன்றியையும் தூதுவருக்குத்
தெரிவித்துள்ளார்.