தமிழர் பகுதியில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் விழா
பட்டிப் பொங்கல் விழாவும் கோபவனியும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த விழாவானது இன்று பிற்பகல் (16.01.2024) சத்திர சந்தியில் உள்ள ஞான வைரவர் ஆலயத்தில் வெகு சிறப்பாக இந்த விழா இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆலயத்தில் இருந்து ஆரம்பமான கோபவனி யாழ் நகரைச் சுற்றி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. ஆலயத்தில் சிறப்புப் பூசைகள் இடம்பெற்று மாடுகளுக்கு உணவளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் , வடமாகாண சபை முன்னாள்
உறுப்பினர் பா. கஜதீபன், மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ப. தர்ஷானந்த் ,
யாழ்.மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் , மத குருமார்கள் மற்றும் சமய ஆர்வலர்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.
மேலதிக செய்தி- தீபன்
திருகோணமலை
திருகோணமலை மாவட்ட காந்தி சேவை சங்கத்தினால் இன்று (16) மாட்டுப்பொங்கல் கன்னியா
பகுதியிலுள்ள பட்டியொன்றில் கொண்டாடப்பட்டது.
மிருக வதையை தடுப்போம். ஆக்களில் அரசியல் செய்து ஆண்டவனின் ஆசிர்வாதத்தை இழக்காதீர்கள். உங்களுக்கு உணவளிக்கும் எங்களை பாதுகாப்பது மனிதர் உங்களது கடமையாகும். எங்களது உணவை மறுப்பது உரிமை மீறலாகும் என்ற பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் திருகோணமலை முன்னாள் நகர சபை உறுப்பினர் இலிங்க ராசா மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சாந்தி சேவை சங்கத்தினர், கன்னியா அகத்தியர் ஆதீனம் தம்பிரான், சிவில் சமூக அமைப்பினர் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக செய்தி-பதுர்தீன் சியானா
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
