முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முதன்முறையாக பட்டத்திருவிழா
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் முதன்முறையாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பட்டத்திருவிழாவும் பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
புதுக்குடியிருப்பு குயின் பூங்காவில், பட்டப்போட்டி, சுவையான உணவுகள், பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளுடன் மிக சிறப்பாக புதுக்குடியிருப்பு குயின் பூங்காவில் நேற்றையதினம் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் முதன்முறையாக குயின் பூங்காவில், பட்டப்போட்டி, உணவு, பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் மிக சிறப்பாக நேற்றையதினம் (18.01.2026) காலை ஆரம்பமாகி இரவு 10 மணி வரை இடம்பெற்று நிறைவு பெற்றிருந்தது.
பலர் பங்கேற்பு
குறித்த நிகழ்வில் பட்டப்போட்டி, கட்டிய மனைவியை கதிரையில் ஏற்றல், கண்கட்டி கணவன் மனைவிக்கு வாழைப்பழம் தீர்த்துதல், ஊசிநூல் கோர்த்தல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், சாக்கோட்டம், மா ஊதி காசெடுத்தல், நீர் நிரப்புதல் என பல நிகழ்வுகள் இடம்பெற்று வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வே. கரிகாலன், சட்டதரணி எஸ்.தனஞ்சயன், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ்வரன், புதுக்குடியிருப்பு வர்த்தகசங்க தலைவர் த. நவநீதன், வடக்கு கிழக்கு பொருளாதார நிலையத்தின் பணிப்பாளர் பிரதீபன், கமநல சேவை நிலையத்தின் ஒய்வுபெற்ற உதவி ஆணையாளர் தி.அமிர்தலிங்கம், வடக்கு தொழில்துறை மன்றத்தின் தலைவர் டிலான், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய உப பொறுப்பதிகாரி , குயின் பூங்காவின் இயக்குனர் சுபாஷ், குயின் பூங்கா பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam