வவுனியா மாவட்டத்தின் பட்டாணிசூர் பகுதி எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிப்பு
வவுனியாவில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பட்டாணிசூர் பகுதி எதிர்வரும் திங்கள் கிழமை விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, பட்டாணிசூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த கிராமம் கடந்த நான்காம் திகதி முடக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, குறித்த கிராமம் முடக்கப்பட்டு இன்றுடன் 12 நாட்கள் கடக்கின்ற நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளது.
வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நகரப்பகுதிகள் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில் பசார்வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தைவீதி, கந்தசாமி கோவில் வீதி, ஹொறவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி என்பன தொடர்ந்தும் முடக்கப்படுவதுடன், ஏனைய பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam