மருத்துவமனை நடைபாதையில் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகள்!சுகாதார அமைச்சகம் மறுப்பு
மருத்துவமனை நடைபாதையில் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணையங்களில் பதிவிடப்பட்டது போன்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அவசரகால சூழ்நிலைகளில் செயல்படுமாறு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த படங்களில் உள்ளவர்கள் அனைவரும் கோவிட் நோயாளிகளா? என்று சொல்வது கடினம். பொதுவாக,கோவிட் நோயாளிகள் மூடப்பட்ட அறைகளில் வைக்கப்படுவார்கள், அங்கு வெளியாட்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
இதேவேளை, கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பல மருத்துவமனைகளில் உள்ள சிகிச்சை அறைகள் நிரம்பியுள்ளன.
இருப்பினும், எல்லா மருத்துவமனைகளிலும் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது செயல்பட ஒரு அமைப்பு உள்ளது.
தம்மை பொறுத்தவரையில், மருத்துவமனைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகளுக்கு இடமளிக்கவும், அவர்கள் நன்றாக சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
