கொரோனாவுடன் டெங்கு நோய் பாதித்த நோயாளிகள்
டெங்கு மற்றும் கோவிட் ஆகிய இரண்டும் தொற்றிய நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் உபுல் திஸாநாயக்க (Dr.Upul Dissanayake) தெரிவித்துள்ளார்.
அப்படியான நோயாளிகள் தனக்கு கீழ் சிகிச்சை பெற்றுவருவதாக கூறியுள்ள உடல் கூறு மருத்துவருமான அவர் கோவிட் நோயாளிகளை விட தற்போது டெங்கு நோயாளிகள் அதிகம் காண முடிகின்றது எனவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கோவிட் பூஸ்டர் தடுப்பூசியின் பக்கவிளைவுகளாக உடல் தசைகளில் வலி, காய்ச்சல், தலைவலி ஆகியன ஏற்படலாம். எனினும் கடுமையான காய்ச்சல் மற்றும் தசை வலி ஏற்பட்டால், அது டெங்குவாக இருக்கலாம்.
பூஸ்டர் தடுப்பூசியின் பக்கவிளைவு எனக் கருதி, சிகிச்சை பெறலாமல் இருந்த டெங்கு நோயாளிகள் சிலருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்ட சில சம்பவங்கள் நடந்துள்ளன.
இதனால், மருத்துவர் ஒருவரிடம் சென்று தமக்கு ஏற்பட்டிருப்பது கோவிட்டா, டெங்குவா அல்லது பூஸ்டர் தடுப்பூசியின் பக்கவிளைவா என்பதை அறிந்துக்கொள்வது நல்லது.
வாசனை மற்றும் சுவை அறியாமை ஆகியவற்றை தவிர கோவிட் மற்றும் டெங்கு நோய்க்கான அறிகுறிகள் அனைத்து சமனானவை எனவும் உபுல் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.





Quartersகு செல்வதாக செந்தில் கூறிய விஷயம், பாண்டியனின் ஷாக்கிங் பதில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
