சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை வவுனியாவில் நோயாளர்கள் பாதிப்பு
சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வவுனியாவில் 600க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பகுதியினர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் வவுனியாவிலும் பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவில் பொது வைத்தியசாலை
இதன் காரணமாக வவுனியாவில் பொது வைத்தியசாலைக்கு ஹெப்பிட்டி கொல்லாவ, பதவிய, உட்பட தூர இடங்களில் இருந்து வரும் 600க்கு மேற்பட்ட நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பிச்செல்வதாக கூறப்படுகிறது.
குறிப்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கு 600க்கும் மேற்பட்ட நோயாளர்கள் உட்பட மொத்தமாக 1000 பேர் வரை நாளாந்தம் மருத்துவ தேவைக்காக வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |