முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார தொழில் சங்கங்களில் பணிப்புறக்கணிப்பால் நோயாளர் அவதி
நாட்டில் மருத்துவ சேவையில் ஈடுபடும் 15 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆதார மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனை, ஒட்டுசுட்டான், மல்லாவி, உண்ணாப்பிலவு ஆதார மருத்துவமனைகளில் சிகிச்சைகள், மருந்து விநியோகங்கள் பிரிவுகளில் மக்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இன்று(06) இரண்டாவது நாளாகத் தொடர்வதால் செவ்வாய்க்கிழமைகளில் மாதாந்தம் சிகிச்சை பெறும் ஊசி ஏற்றும் நோயாளர்கள் மருத்துவரிடம் காட்டியும் மருந்துகளையோ ஊசிகளையோ ஏற்றிக்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
மருத்துவர்கள் தங்களைப் பார்வையிட்டாலும் கிளினிக் நோயாளர்கள் மருந்துகளை, ஊசிகளை ஏற்றிக்கொள்ள முடியாமல் அலைச்சலுடன் வீடு திரும்பியுள்ளார்கள்.
இந்தநிலை தொடருமானால் மருத்துவர்களும் நாளை (புதன்கிழமை) பணியில் இருக்கமாட்டார்கள் என்று நோயாளர்களிடம் தெரிவித்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மாதாந்த சிகிச்சை பெறும் நீரிழிவு நோயாளர்கள், சுவாச நோயாளர்கள், சிறுநீரக நோயாளர்கள், மனநிலை நோயாளர்கள், மார்பக புற்றுநோய், உயர்குருதிஅமுக்கம், இதய நோயாளர்கள், நரம்பியல் நோயாளர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.





Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
