அரசாங்கத்திற்கு ஏற்படவிருந்த 450 மில்லியன் டொலர் நட்டம்: பாட்டலி சம்பிக்க ரணவக்க
அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய, கமாடிட்டிஸ் நிறுவனத்துக்கு நிலக்கரி கேள்வி பத்திர அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அரசாங்கத்துக்கு 450 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று பொது நிறுவனங்களுக்கான குழு தெரிவித்துள்ளது.
கோப் உறுப்பினர்களின் முதலாவது கூட்டம்
நேற்றுமுன் தினம் (07.10.2022) நடைபெற்ற புதிய கோப் உறுப்பினர்களின் முதலாவது கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.
நிலக்கரி கொள்வனவு

இதற்கமைய, கூட்டுச் சுட்டெண்ணின் அடிப்படையில் 284.84 அமெரிக்க டொலர்களுக்கு ஒரு தொன் நிலக்கரியை கொள்வனவு செய்ய நிறுவனம் எதிர்பார்த்திருந்தது.
எனினும் அதே அளவு 179.55 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
முந்திய செயல்பாடு நடந்திருந்தால், அரசாங்கத்துக்கு 450 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.