இறையடக்கம் செய்யப்பட்ட ஆயர் பொன்னையா ஜோசப்பின் திருவுடல்
நித்திய இளைப்பாறிய மட்டு.அம்பாறை ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் திருவுடல் இன்று மாலை மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்திற்குள் இறையடக்கம் செய்யப்பட்டது.
சுகயீனமுற்றிருந்த நிலையில் கடந்த 19 திகதி தனது 74 வது வயதில் ஓய்வுநிலை ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை காலமானார்.
அவரின் திருவுடல் தன்னாமுனைதேவாலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு இரு தினங்களாக அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இலங்கை தமிழரசுக்கட்சி
நேற்றும் இன்றும் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் இன்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிநேசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று மாலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அன்டன் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில்இறுதி நாள்கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் இலங்கையின் மறை மாநிலங்களின் ஆயர்கள், சர்வ மதங்களின் குருமார்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்பு களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
