தேரரிடம் மன்னிப்பு கோரிய போதகர் ஜெரோமின் பெற்றோர்
தமது மகன் மத முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் மன்னிப்பு கோரியுள்ளனர்.
ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு நேற்று(18.08.2023) சென்ற இவர்கள், விகாரையின் விகாராதிபதி ஓமல்பே சோபித தேரரைச் சந்தித்து இந்த மன்னிப்பை கோரியுள்ளனர்.
மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாடொன்றில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
வெளிநாட்டு பயணத்தடை
இதன் பின்னணியில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கான வெளிநாட்டு பயணத்தடையை விதித்திருந்தது.
அத்துடன், ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த போதகர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




