இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருந்தவர்களுக்கு சாதகமான செய்தி - சற்றுமுன் வெளியான தகவல்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கல் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொழிநுட்பக் கோளாறு காரணமாக இன்று (12) காலை இந்த செயல்முறையை இடைநிறுத்த முடிவு செய்திருந்தனர்.
இருப்பினும், தொழிநுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதால், கடவுச்சீட்டுகள் வழக்கம்போல் வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஏற்பட்ட கணினி செயலிழப்பால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மீட்டெடுக்க பணியாற்றும் அதிகாரிகள்
இந்த நிலையில் விரைவில் சேவைகளை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், இந்த அமைப்பை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri