வடிகாலிலிருந்து பெறப்பட்ட பொதி : வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி
கொழும்பு(Colombo) - மகரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றிலிருந்து 180 கடவுச்சீட்டுக்கள் அடங்கிய பை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடவுச்சீட்டுக்களை மகரகமயில் (Maharagama) உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுமார் 500 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
அவர், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களை தேடுபவர்களிடமிருந்து 260 மில்லியன் ரூபா பணத்தினை பெற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, நிறுவன உரிமையாளர் பணத்தை மோசடி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
