மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் பிரேரணைகள் நிறைவேற்றம்
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 14 வது சபை அமர்வில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், தவிசாளர்கள் உறுப்பினர்களிடம் கோரிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 14 வது சபை அமைப்பு இன்று(10.07.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பிரதேச சபைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள சபை செயலாளர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோருக்கு ஏனைய சபை உறுப்பினர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
அமர்வில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
இதனைத் தொடர்ந்து, சபையின் குறை நிரப்பு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை நிறுத்துதல், தனியார் கல்வி நிலையங்களினூடாக கல்விச் சுற்றுலா செல்வதை இரத்துச் செய்தல், களுவாஞ்சிகுடி பேருந்து தரிப்பிடத்தில் புதிதாக கடைத் தொகுதிகளை அமைத்தல், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னால் வீதியில் இடப்பட்டுள்ள வெள்ளைக் கோடுகளை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு தெரிவித்தல்.

அத்துடன், பிரதேசத்தில் பிரதேச சபையின் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்குரிய அனுமதியைப் பெறுவதற்கு மக்களுக்கு 6 மாத காலம் அவகாசம் வழங்குதல், களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதியை கிழக்கு மாகாண ஆளுனரின் பங்குபற்றுதலுடன் திறந்து வைத்தல், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பு நிலையத்தை குத்தகைக்கு விடுதல், சேகரிக்கப்பட்டுள்ள கழிவுகளை புதைத்தல், மரண வீடுகளில் மதுபாவனை, வெற்றிலை பாவணை, புகைத்தல், உள்ளிட்ட பாவணைகளை முற்றதக நிறுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் துண்டுபிரசுரங்கள் ஓட்டுதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் கட்சி பேதங்கள் அற்ற முறையில் முன்னெடுக்க சபை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இலங்கையில் சிறந்ததொரு பிரதேச சபையாக இந்த பிரதேச சபை இயங்க வேண்டும் என்றும் தவிசாளர் உறுப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam