ஆசன முன்பதிவு செய்த பயணிகளை நடுவீதியில் விட்டுச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை..!
அண்மைகாலமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் செயற்பாட்டால் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 19 இரவு 10.30 மணியளவில் கொழும்பு புறக்கோட்டை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஆசன முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச்செல்லாமல் சென்றுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு மூன்று பயணிகள் நீர்கொழும்பு வயிக்கால பகுதியில் இருந்து 36,37,40 போன்ற ஆசனங்களை முன் பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, பேருந்தானது 11:45 மணியளவில் குறித்த பிரதேசத்திற்கு வருகை தரும் என நடத்துனரால் கூறப்பட்ட நிலையில் குறித்த நபர்கள் 11மணியளவில் இருந்து 11:30 மணிவரை நடத்துனரிடம் தொலைபேசி அழைப்பு மூலம் தமது வருகைக்கான காத்திருப்பை உறுதி செய்துள்ளனர்.
நிறுத்தாமல் சென்ற பேருந்து..
அதன் தொடர்ச்சியாக 11:45 மணியளவில் குறிப்பிட்ட பிரதேசத்தை கடந்து அதிக வேகத்தில் பேருந்து பயணிகள் பேருந்தை மறித்தபோதும் பேருந்தை நிறுத்தாது பேருந்து கடந்து சென்றுள்ளது.
இந்நிலையில் குறித்த பயணிகள் உரிய பேருந்து நடத்துனரிடம் தொலைபேசி அழைப்பு எடுக்க முயன்ற போது நடத்துனரிடம் இருந்து குறிப்பாக 30 நிமிடங்கள் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
பின்னர் தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொண்ட நடத்துனர் தமது பேருந்தானது குறிப்பிட்ட இடத்தை கடந்து 10KMற்கு அப்பால் சென்று விட்டது எப்படியாவது தாம் காத்திருக்கிறேம் வருகை தந்து பயணத்தை தொடருமாறு கூறப்பட்டது.
நடத்துனரின் செயல்
இந்நிலையில் குறித்த பேருந்தில் சென்றுகொண்டிருந்த தமது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு தமது நிலமை தொடர்பாக கூறிய போது குறித்த நண்பர் குறித்த மூன்று முன்பதிவு செய்த ஆசனங்களில் கொழும்பில் இருந்தே பயணிகள் நடத்துனரால் அமர வைத்து ஏற்றிச்செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே இது நடத்துனர் மற்றும் சாரதி என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி மற்றும் தமது சொந்த தேவைக்காக பணத்தை சேமிக்கவே இந்த செயல் இடம்பெற்றது என தெரிய வந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபை பெறுப்பதிகாரியிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பு கொண்ட போது அவர்கள் அசமந்த போக்காக பதிலளித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் அண்மை காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகள்இனி வரும் காலங்களில் இடம் பெற கூடாது எனவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நடத்துனர் மற்றும் சாரதி என்போர் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.




