யாழ். சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணம் சர்வதேச (பலாலி) விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்காக 200 மில்லியன் ரூபா செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் பயணத்திற்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதற்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
சிறப்பு ஆய்வு விஜயம்
கடந்த 16ஆம் திகதி அன்று விமான நிலையத்திற்கு சிறப்பு ஆய்வு விஜயம் செய்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு அமைச்சர், இந்த மூலோபாய ரீதியாக அமைந்துள்ள விமான நிலையத்திற்கு வந்து செல்லும் மற்றும் புறப்படும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானித்த நிலையிலேயே அமைச்சரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பலாலி விமான நிலையம் தற்போது சர்வதேச விமான நிலையமாக இயங்கி வருகிறது, இது யாழ். குடாநாட்டின் முக்கிய நுழைவாயிலாக செயல்படுகிறது. இந்தியாவின் அலையன்ஸ் ஏர் தற்போது சென்னையில் இருந்து தினசரி விமானங்களை இயக்குகிறது, ஒரு விமானத்திற்கு சுமார் 60 பயணிகளை அது ஏற்றி வருகிறது.
விமான நிலைய விரிவாக்கல்
மேலதிகமாக, இந்தியாவிலிருந்து இண்டிகோ விமான நிறுவனம் சென்னைக்கும் பலாலிக்கும் இடையே விமான சேவையை ஆரம்பிக்க தயாராகி வருகிறது. இந்த சர்வதேச விமானங்களுடன், டிபி ஏவியேசன் மற்றும் சினமன் ஏர் மூலம் உள்நாட்டு சேவைகளும் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு விமான நிறுவனத்திலிருந்தும் நான்கு விமானங்கள் தற்போது இரத்மலானை விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாராந்த விமானங்களை இயக்குகின்றன.
இந்த நிலையில் முன்மொழியப்பட்ட விமான நிலைய விரிவாக்கல் திட்டத்தின்படி, தற்போதுள்ள பயணிகள் முனையங்களை விரிவுபடுத்துதல், அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் அதிநவீன வரியற்ற விற்பனை வளாகத்தை நிர்மாணித்தல், பயணிகளின் வசதிக்காக சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், குடிவரவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
