கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையொன்றை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து, அவற்றை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற விமானப் பயணியே கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணி கைது
வெளிநாட்டவர் கொண்டு சென்ற பயணப் பொதிகளுக்குள், சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 33,000 சிகரெட்டுகள் அடங்கிய 165 சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மதிப்பு சுமார் 49 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாரதியாக பணியாற்றும் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.