மட்டக்களப்பில் அகற்றப்பட்ட கட்சிகளின் விளம்பர பதாகைகள்..!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தப்பட்ட தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட கட்சிகளின் விளம்பர பதாகைகள் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் அகற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரும் மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் தலைமையில் நகரில் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் அலுவலகங்களில் தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கட்சிகளின் விளம்பர பதாகைகள் நேற்று (30) மாலை அகற்றப்பட்டன

நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறியதன் காரணமாக மாவட்ட தேர்தல் திணைக்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் உடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam