கடலுக்குள் இருந்து மிதந்த உழவு இயந்திரத்தின் பாகங்கள்! (Photos)
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைபகுதியில் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் இனங்காணப்பட்டுள்ளது.
தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் கொண்டுள்ள நிலையில் கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.
இந் நிலையில், இன்று (08)காலை புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாங்கள் சில கரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உழவு இயந்திரத்தின் நடு சில்லின் பெரிய ரயர்கள் இரண்டு கரையில் தென்பட்டுள்ளதுடன் இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், உழவு இயந்திரத்தின் பாகங்களை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப்பார்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.