13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த யாழில் ஒன்றுக்கூடிய கட்சிகள்
அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் தேசிய பரப்பிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று(03.05.2023) யாழ்ப்பாணத்தில் அவசரமாகச் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இலங்கை ஆட்சியாளர்களும் பேசி வருகின்ற நிலையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவும் அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இந்தநிலையில் 13 ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இல்லை என்பதாக அரச தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
ஒற்றையாட்சியின் கீழ் நிராகரிப்பு
ஒற்றையாட்சியின் கீழான 13ஆவது திருத்தததை முழுமையாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாகக் கூறிவருகின்றது.
இதற்கமைய தமிழர் பரப்பிலுள்ள பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து ஒருமித்து தீர்மானம் எடுக்கும் முகமாக விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்தக் கூட்டத்தில் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை
ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி விசேட தீர்மானமொன்று எடுக்கப்படும் என்றும்
எதிர்பார்க்கப்படுகின்றது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
