ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய கூட்டணி!
இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகின்றன.
இதற்கமைய தேர்தல் எப்போது நடைபெறும் என்பது நிச்சயமற்றதாகவே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைக்க உத்தேசித்துள்ளன.
சஜித்-டளஸ் கூட்டணி
சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் டளஸ் அழகப்பெரும தலைமையிலான 13 பேர் கொண்ட அணியும் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டியிடுவார். வெற்றிப்பெற்றால் டளஸ் அழகப்பெருமவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்ற அடிப்படையிலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் தலைமையிலான கூட்டணி
இதேவேளை ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக ஆதரவை திரட்டி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
எனினும் தாம் இலங்கையில் இல்லாத இரண்டு வாரக்காலத்தில் ரணிலுக்கான கூட்டணி முயற்சியின் செயற்பாடுகளை சுசில் பிரேம்ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, நளின் பெர்னாண்டோ மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் மேற்கொள்வர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதே இந்த கூட்டணியின் நோக்கமாகும்.
மேலும், தற்போது வரை தமக்கு 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 16 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
