நிதி அமைச்சின் அனுமதி இல்லாமையால் இருபத்தையாயிரம் பணியாளர்கள் பாதிப்பு! சஜித் மற்றும் ரணில் வெளியிட்ட தகவல்கள்
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் கடந்த வெள்ளிக்கிழமை சபையில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விவாதங்கள் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிகள் தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் விமர்சன ரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வரவு செலவுத் திட்டம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது கூறப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு இதோ,
2022 ஆண்டின் பாதீட்டில், 10 அமைச்சுக்களுக்கு மாத்திரமே 89 வீத ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickramasinghe) இன்று நாடாளுமன்றத்தில் தொிவித்துள்ளாா். பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு, மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவா், நிதியமைச்சு, உள்ளுாராட்சி மற்றும் மாகாண, பாதுகாப்பு அமைச்சு என்பவற்றுக்கு மாத்திரம் 74 வீதமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா். இதனால் ஏனைய அமைச்சுகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படும் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா். |
இலங்கையின் அரச வங்கிகளுக்கான - இலங்கை வங்கி மக்கள் தேசிய சேமிப்பு வங்கி, அடகு மற்றும் முதலீட்டு வங்கி, பிரதேச வங்கி ஆகியவற்றின் பணியாளா்களுக்கு 2021, 2023 ஆம் ஆண்டுக்கான வேதன உயா்வுகளுக்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. வங்கிகளின் பணிப்பாளா் சபைகளின் அனுமதிக்கிடைத்துள்ள போதும், இதுவரை நிதியமைச்சின் அங்கீகாரம் கிடைக்காமை, இதுவே முதல் தடவை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளாா்(Sajith Premadasa). இதன் காரணமாக 25000 பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா். |
பாதீட்டு விவாதங்களின்போது நிதியமைச்சா் ஒருவா், நாடாளுமன்றத்தில் அமர்ந்து நாடாளுமன்ற உறுப்பினா்களின் கருத்துக்களை செவிமடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் இம்தியாஸ் பாக்கீர் மாக்காா் கோாியுள்ளாா். எனினும் தற்போதைய அரசாங்கத்தின் நிதியமைச்சரை நாடாளுமன்றத்தில் காண முடியவில்லை என்று அவா் குறிப்பிட்டாா். |
