கோட்டா மாத்திரம் அல்ல. கோட்டாவை அழைத்து வந்தவர்களும் வீடுகளுக்கு செல்லவேண்டும் -சரத் பொன்சேகா!(Video)
கோட்டா மாத்திரம் வீட்டுக்கு செல்லக்கூடாது, கோட்டாவை கொண்டு வந்தவர்களும் வீடுகளுக்கு செல்லவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், கோட்டா கோ ஹோம் என்ற சுலோகத்தை மாத்திரம் கூறுவதால் எதனையும் சாதிக்கமுடியாது.
எனவே அவரை ஜனாதிபதியாக்கியவர்களும் இன்றைய நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டும். கப்பல் கவிழப்போகிறது என்றவுடன் “எவன்ட் காட்” தலைவர் நாட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
இதேவேளை இடைக்கால அரசாங்கம் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே மோசடிக்காரர்களின் பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆசிர்வாதம் உள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மோசடிகாரர்களிடம் இருந்து நாடு விடுவிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்படும் பொதுமக்களின் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



