21க்கு தாம் எதிர்ப்பு! புதுமையான காரணங்களை முன்வைக்கும் சரத் வீரசேகர
21க்கு எதிர்ப்பு
21வது அரசியல் அமைப்பின் ஊடாக மீண்டும் 19வது திருத்தம் கொண்டு வரப்படுமாக இருந்தால், அதனை தாம் எதிர்ப்பதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ஏற்கனவே 19வது திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, அதனை தாம் மாத்திரமே எதிர்த்தமையை அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்கு தற்போதைய தேவை, புதிய அரசியலமைப்பே தவிர, அரசியல் அமைப்பின் திருத்தங்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்ப்புக்கு காரணம் ரணிலும் சஜித்தும்
தற்போதைய நிலையில், 21வது திருத்தம், நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதியின் அதிகாரங்கள், பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சென்று விடும் என்பதன் காரணமாகவே, தாம் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவதாக சரத் வீரசேகர தெரிவித்தார்.