மீண்டும் நாடாளுமன்றுக்கு வருமாறு சந்திரிகா குமாரதுங்கவுக்கு அழைப்பு! நாடாளுமன்றத்தில் பகிரங்க கோரிக்கை
சந்திரிகா பண்டாரநாயக்கவையும் நாடாளுமன்றுக்கு அழைத்து வரவேண்டும் என்று தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ் யோசனையை முன்வைத்துள்ளார்.
இந்த நாட்டை அபிவிருத்தி செய்தது மாத்திரமல்ல, நாட்டை நாசமாக்கியதாக குற்றம் சுமத்தப்படும் பலர் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன போன்றோர் நாடாளுமன்றில் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர்.
எனினும் சந்திரிகா குமாரதுங்க மாத்திரமே நாடாளுமன்றில் இல்லை. எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசியப்பட்டியலின் ஒருவர் பதவி விலகி சந்திரிகா குமாரதுங்கவை நாடாளுமன்றுக்குள் அழைத்து வரவேண்டும்.
அத்துடன், இதுவரையில் அரச சேவையில் அங்கம் வகித்த அலுவலகர்களையும் அழைத்து வந்து நாட்டை கட்டியெழுப்பும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று அத்தாவுல்லாஹ் யோசனை வெளியிட்டார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri