முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இலங்கை நாடாளுமன்றில் ஒரு நிமிட அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நினைவுக்கூறும் வகையில் இன்று நாடாளுமன்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், இன்று தமது நாடாளுமன்ற உரையின்போது, இந்த அஞ்சலி நிகழ்வுக்கான அனுமதியை, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கோரிய நிலையில் அஞ்சலி நிகழ்வு நிகழ்த்தப்பட்டது,

இந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பினர், முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக இந்த ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியதாக குறிப்பிட்டார்.
எனவே இந்த நிகழ்வை நாடாளுமன்ற பதிவு புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர், குறித்த ஒரு நிமிட நிகழ்வு தொடர்பில் சபாநாயகருக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர் இது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வார் என்றும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து வினோநோகராதலிங்கம் தமது உரையை தொடர்ந்தார்
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam