மகிந்த ராஜபக்ச உட்பட்ட வன்முறையை துாண்டியவர்கள் மீது விசாரணையை கோரும் ஜேவிபி
2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறைக்கு முதல் காரணமான, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட்டவர்கள் தொடர்பில் உரிய வகையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி, கோரிக்கை விடுத்துள்ளது
நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இந்த கோரிக்கையை விடுத்தார்.
எனினும் இந்த வன்முறைகள் தொடர்பில் ஜேவிபியை இலக்கு வைத்து விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

தமது கட்சியை பொறுத்தவரையில், அரச பயங்கரவாதத்தினால், அதிகமாக பாதிக்கப்பட்ட கட்சியாகும்.
அத்துடன் குறைப்பாடுகள் இருந்தால் அவற்றை ஏற்றுக்கொண்டு, ஜனநாயக ரீதியில் செயற்படும் கட்சியாகும்.
எனினும் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறையின்போது, அதில் ஜேவிபிக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் அன்று அந்த வன்முறையின்போது பெருமளவான தமிழர்களை தமது கட்சியே காப்பாற்றியது என்று அனுரகுமார குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண நுாலகம் எரிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக செயற்பட்டது தமது கட்சியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் கடந்த மே 9ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை பல இடங்களில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஜேவிபி உறுப்பினர்கள் எவரும் இல்லை என்றும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri