புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் ஏற்கனவே அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது- நாடாளுமன்றில் அமைச்சர்
மின்சார திருத்த சட்டமூலம்
மின்சார திருத்தச்சட்ட மூலத்துக்கும், இந்தியாவின் அதானி குழுமத்துக்கும் உள்ளதாக கூறப்படும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார்.
எனினும் அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்ற வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்க இலங்கையின் அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் பரிந்துரைக்கப்பட்ட அதானி
இந்தியாவினால் பரிந்துரைக்கப்பட்ட அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையும் ஆகியன கட்டுப்பட்டிருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதானி குழுமத்தின் சாத்தியக்கூறு அறிக்கையின்படி, மன்னார் மற்றும் பூநரியில் காற்றாலை மின் திட்டம் மூலம் 620 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும் என்றும், ஒரு அலகின் விலை 0.7 அமெரிக்க டொலர்கள் என்றும் முன்மொழியப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
