கோட்டாவின் நிவாரணத்துக்காக நியமிக்கப்பட்டவரே ரணில்! நாடாளுமன்றில் சுமந்திரன்! (Live)
மங்கள சமரவீரவின் எதிர்வுகூறல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞானம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கை லெபானாக மாறும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எதிர்வுகூறியிருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய சுமந்திரன் இந்த கருத்தை கோடிட்டுக்காட்டினார்.
கோட்டாபயவின் வரி ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால், நாடு கிரிஸ் நாடு எதிர்கொண்ட திவால் நிலைக்கு செல்லும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்ததாக சுமந்திரன் தெரிவித்தார்.
சீரழித்தவர் பதவியில் இருக்கிறார்
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர், நாட்டின் தலைமையில் இருந்து விலகவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றபோதும், அவர் தொடர்ந்தும் பதவியில் இருக்கிறார்.
நாட்டின் இன்றைய நிலைமைக்கு பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சர்கள் விலகியபோது, அந்த அரசாங்கத்துக்கு பொறுப்பான தலைவரும் விலகவேண்டும் என்று சுமந்திரன் வலியுறுத்தினார்.
எனினும் அதனை செய்யாத ஜனாதிபதி, இடைக்கால நிவாரணத்தை பெறுவதற்காக, ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமராக நியமித்துள்ளார் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
21வது அரசியலமைப்பு திருத்தத்தை முன்கொண்டு செல்லமுடியாத நிலையில் அமைச்சரவையும் தோல்வி கண்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் நாடாளுமன்றத்திலும் அரசாங்கத்தின் பல குழுக்கள் பிரிந்து செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 22 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
