ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகல்! சுயாதீனமாக செயற்படப்போவதாக சம்பிக்க ரணவக்க அறிவிப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் இருந்து விலகல்
தாம் இன்று முதல் ஐக்கிய மக்க்ள் சக்தியில் இருந்து விலகி, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று அவர் இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்
தாம் சுயாதீனமாக செயற்படவுள்ளமை, தனிப்பட்ட குரோதம் காரணமாகவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கைக்கு இணங்கிய செயற்பாடு
தாம் சுயாதீனமாக செயற்படவுள்ளமை, ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்கீழ் அனுமதிக்கப்பட்ட விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தாம், அரசாங்கத்தின் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதாக வெளியான தகவலில் எவ்வித உண்மைகளும் இல்லை என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்
நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த சம்பிக்க ரணவக்க, இன்று அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம்,சர்வகட்சி அரசாங்கம் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 33 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
