மொட்டு கட்சி ஏற்றுக்கொண்ட, நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கை!- நாடாளுமன்றில் எதிர்கட்சி
மொட்டு ஏற்றுக்கொண்ட நல்லாட்சி
நல்லாட்சியின் நிர்வாகத்தை இன்று மொட்டு கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் நாட்டுக்கு டொலர் தேவை என்று பிரதமர் தமது உரையில் கூறியபோதும் அந்த டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை அவர் கூறவில்லை என்று லச்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டா இருக்கும் வரை சர்வதேச ஆதரவு இ்ல்லை
இலங்கையை பொறுத்தவரையில் இன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நம்பிக்கையைக் கூட பெற்றுக்கொள்ளமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை கோட்டாபய ராஜபக்ச இருக்கும் வரை சர்வதேசத்தின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ளமுடியாது என்றும் லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
லச்மன் கிரியெல்லயின் கேள்விக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தே பெற்றுக்கொள்ளமுடியும் என்று குறிப்பிட்டார்.

அதுவரை இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்தே டொலர்களை பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.
இதனை தவிர, ஜப்பான், சீனா உட்பட்ட நாடுகளை கொண்ட மாநாட்டை கூட்டி டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டியிருக்கும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri