தற்போதைய பிரச்சினையை அரசியலமைப்புக்கு அப்பால் சென்று தீர்க்குமாறு அனுரகுமார யோசனை!
அரசியல் பிரச்சினை தீர்க்கப்படும் வரை, இலங்கையின் பொருளாதார பிரச்சினையை தீர்க்கமுடியாது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இதனை இன்று நாடாளுமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஸ்திரதன்மையில் பிரச்சினைகள் இல்லை. எனினும் இன்று அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதும் பொதுமக்களுக்கு நம்பிக்கையில்லை.
ஆகவேதான் அவர்கள் ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு கூறுகின்றனர்.
எனவேதான் அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
இந்தநிலையில் அரசியலமைப்புக்சுகு உட்பட்டு, இடைக்கால நிர்வாகத்தை கொண்டு வந்து அல்லது புதிய அமைச்சரவையே உருவாக்கி இந்த பிரச்சினையை தீர்க்கமுடியாது.
எனவே அரசியலமைப்பு அப்பால் சென்று யோசனை ஒன்றை முன்வைத்து, அதனை திருத்தமாக 3இல் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்புக்குள் கொண்டு வரமுடியும்
இதன்படி நாட்டில் குறிப்பிட்ட காலத்துக்கு செயற்படமுடியும்.
இதனையடுத்து புதிய நிர்வாகம் ஒன்று பொதுமக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படமுடியும் என்றும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



