நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ள அறிவித்த உறுப்பினர்கள்!
இலங்கையின் நாடாளுமன்றத்தில் தாம் குழுவினர் தனித்து செயற்படவுள்ளதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்
இதன்படி பொதுஜன பெரமுனவின் தாம் உட்பட சுசில் பிரேமஜயந்த, ஜோன் செவினரட்ன, நிமல் லன்சா, சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே ஆகியோர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
இதேவேளை விமல் வீரவன்ச, தமது குழுவினரும் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்தார்.
உதய கம்மன்பில, டிரான் அலஸ், வசந்த நவரட்ன, நிமல் லன்சா, ஜெயந்த சமரவீர உட்பட்டவர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
இதனை தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அறிவித்தார்.



