நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவு குறித்து அதிருப்தி
நாடாளுமன்ற அமர்வுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்பதாம் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் அமர்வுகளில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகக் குறைந்த அளவிலேயே பங்கேற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
செயற்குழு அறிக்கையில் தெரியவந்துள்ள விடயம்
கடந்த 2022ஆம் ஆண்டு நாடாளுமன்ற செயற்குழு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 அமர்வுகளுக்கு மட்டுமே பங்கேற்று உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

உரிய பதில் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு
கடந்த 2022ஆம் ஆண்டு 9ஆம் நாடாளுமன்றின் 101 அமர்வுகள் நடைபெற்றுள்ளன, இவற்றில் வெறும் 12 அமர்வுகளுக்கு மட்டுமே 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முக்கியமான சட்ட மூலங்கள் குறித்த விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் வாய்மொழி மூலக் கேள்விகளுக்கும் உரிய பதில் கிடைக்கப் பெறுவதில்லை என குற்றம்சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri