வவுனியா பொது வைத்தியசாலைக்கு 261 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - திலீபன் எம்.பி
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் மாடி கட்டிட நடவடிக்கைகாக 261 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட கட்டிடம் பூர்த்தியாகாமல் பாரிய பிரச்சினையை வைத்தியசாலையில் எதிர்நோக்கினர்.
சுகாதார திணைக்களத்தினால் குறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து என்னூடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்றிருந்தேன்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உடனடியாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி அவர்களிடம் இப்பிரச்சினையை எடுத்துக்கூறியதற்கு அமைவாக 261 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் முதல் கட்டமாக இவ்வருடம் 100 மில்லியன் ரூபாய்கான வேலைத் திட்டத்தையும், அடுத்த வருடம் 161 மில்லியன் ரூபாய்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதேவேளை, வவுனியா வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்தமைக்காக
வவுனியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை தலைமை மருத்துவர் ஆகியோரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
