தமிழர்களுக்கு ஈழத்தை கொடுக்காதவர்கள் சீனாவிற்கு தனிநாட்டை கொடுக்கிறார்கள்! ராஜித சீற்றம் - செய்திகளின் தொகுப்பு
கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர்.
எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அதனை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. அன்றி தமிழீழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.
ஆனால் தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழ் ஈழத்தை தர முடியாதெனக் கூறியவர்கள் சீனாவிற்கு வழங்குகின்றனர். அவ்வாறெனில் இவர்களின் தேசப்பற்று எங்கு சென்றது ? இதுவும் தனியொரு ஈழமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
