இலங்கை என்ற அழகிய தீவு ஒவ்வொரு நாட்டிற்கும் துண்டாடப்பட்டு விற்பனை - இராதாகிருஸ்ணன்

Srilanka Radhakrishnan Nuwaraeliya Gotapaya
By Thirumal Apr 25, 2021 05:26 PM GMT
Report

மலையக மக்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது. இது ஒரு துரதிஸ்டமான நிலைமை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்பு கூட்டம் இன்று பதுளையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று இலங்கை என்ற அழகிய தீவு ஒவ்வொரு நாட்டிற்கும் துண்டாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.அதற்கு காரணம் அன்று பெரும்பான்மை சமூகம் மலையக மக்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதியாகும்.

அத்துடன் மாணவர்களின் விளையாட்டு திறன்களை விருத்தி செய்து கொள்வதற்கு தேவையான விளையாட்டு மைதான வசதி கூட இல்லாத நிலையில் பாரதி மகா வித்தியாலயம் கடந்த பல வருடங்களாகவே இயங்கி வருகின்றது. இவ்வாறான நிலையில் கடந்த வாரம் குறித்த பாடசாலையின் பழைய கட்டடம் அமைந்துள்ள பிரதேசத்தில் காணி பிரச்சினை ஒன்று தலவாக்கலை தோட்ட நிர்வாகத்திற்கும், பாடசாலைக்கும் ஏற்பட்டது.

பழைய கட்டிடத்தை விடுதிகளாக அமைத்துக்கொண்டு வசித்துவரும் பாடசாலை ஆசிரியர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் தமது வீட்டு தேவைக்காக குறித்த பிரதேசத்தில் பாடசாலைக்கு சொந்தமான காணியில் வீட்டுத்தோட்டம் ஒன்றினை கடந்த நான்கு வருடங்களாக செய்து வருகின்றார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுவான வேண்டுகோளுக்கமைய வீட்டுத் தோட்டம் ஒன்றினை செய்து அதன் ஊடாக தமது குடும்பத்திற்கு தேவையான மரக்கறி வகைகளை பெற்றுக்கொள்வதாக அந்த ஆசிரியை தெரிவித்தார். இருந்த போதிலும் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான தலவாக்கலை தோட்ட நிர்வாகம் குறித்த காணியில் எவ்விதமான பயிர் செய்கையும் செய்யக் கூடாது என்றும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் பலாத்காரமாக அவை பிடுங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தது. குறித்த காணிப் பிரச்சினையானது கடந்த மூன்று வருடங்களாகவே நடைபெற்று வருவதால், இவ்விடயம் தொடர்பில் நுவரெலியா மக்கள் பிரதிநிதிகளிடம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.ஆனாலும் இன்றுவரை குறித்த பிரச்சினை தீர்வின்றி இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டங்களை துரிதப்படுத்த வேண்டும் என்றும், பல பாடசாலைகளில் நிலவும் காணி, கட்டிடம், தளபாடங்கள், பெளதீக வளங்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறைகளை தீர்ப்பதற்கு முதற்கட்டமாக நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களையும் மலையகத்தின் ஊவா சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

அத்தோடு மலையகத்தில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல வருடங்களாக விடுக்கப்பட்டு வரும் நிலையில் ,பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு மாணவர்களை உருவாக்கும் பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளையும், பிரச்சினைகளையும் இனங்கண்டு அரசியல் பேதமின்றி சகல பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை தமிழ்பேசும் மக்கள் பிரதிநிதிகள் ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும். மலையக கல்வி சமூகத்தின் இவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US