இலங்கை நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி (Video)
இலங்கை நாடாளுமன்றத்தில் மாவீரா்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர்,
துட்டகைமுனு மன்னன் தாம் போரில் வெற்றிகொண்ட எல்லாளனுக்கு மரியாதை செலுத்தக்கூறிய இந்த நாட்டில் போரில் இறந்த மாவீரர்களின் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் இன்று நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களின் தினத்தை முன்னிட்டு மாவீரா்களுக்கு தமது அஞ்சலியை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபா வரையில் வேதனம் உயர்த்தப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
