” இலங்கையின் நாடாளுமன்ற எதிர்கட்சி முன்வரிசை ஆசனங்களில் ஆளும் கட்சியின் உளவாளிகள் ”
எதிர்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்துள்ள அலி சாப்ரி ரஹீம் மற்றும் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர், தொடர்ந்தும் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
இவர்கள் இருவரையும் ஆளும் கட்சியின் உளவாளிகளை போன்று கருதவேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் இது தொடர்பான தீர்மானம், கட்சிகளால் எடுக்கப்படவேண்டும் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் இதில் தீர்மானத்தை எடுக்கமுடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட சபையின் தலைவர் தினேஸ் குணவர்த்தன, முன்னைய ஆட்சியின் போது, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எதிர்கட்சியில் இருந்தபோதும் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததாக சுட்டிக்காட்டினார்.
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam