”பைத்தியகாரர்” என்ற விமா்சனத்தை ஏற்கும் அளவுக்கு ”கோட்டாபயவின் ஆட்சியில் ஜனநாயகம்” - அரசாங்கம்
”பைத்தியக்காரர்” என்று சொல்லும் அளவுக்கு கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
”பைத்தியகாரர்” என்ற சொல்வதை அரசாங்கம் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அரசாங்க கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதுதான் ஒன்றரை வருடங்கள் கழிந்த நிலையில் ஜனாதிபதியின் பெயர் நந்தசேன என்பது பலருக்கு நினைவுக்கு வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சி இன்று சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை தேர்தலின்போது ”தாம் அரச வாகனங்களை பெற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறிய எதிர்கட்சி தலைவர், இன்று அரச வாகனத்தையே பயன்படுத்துவதாக ஜோன்ஸ்டன் பொ்ணான்டோ குறிப்பிட்டார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022