சபாநாயகர் ஆசனத்தில் "கண் தொியும் காது கேட்கும் ” ஒருவரை அமா்த்தவேண்டும்! நாடாளுமன்றில் கோாிக்கை
அஜித் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகா் ஆசனத்தில் இருந்து சபைக்கு தலைமை தாங்க தகுதியில்லாதவர் என்று எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிாியெல்ல இந்த கருத்தை வெளியிட்டார். எதிர்கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாரி விஜேரத்னவின் மீது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கடந்த 20ஆம் திகதியன்று கூறியதாக கூறப்படும் ”தகாத சொல்“ தொடர்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரோஹினிகுமாரி, சபாநாயகரிடம் தமது நாடாளுமன்ற வரப்பிரசாதம் தொடர்பில் இன்று முறையிட்டார்.
திஸ்ஸகுட்டியராச்சி பயன்படுத்திய ”சொல்லை” தாம் கூறினால் அது திஸ்ஸ குட்டியாராச்சியின் ”தாயை” அவமதிப்பது போன்று அமைந்து விடும் என்று ரோஹினிகுமாரி இதன்போது குறிப்பிட்டார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் உாிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ரோஹினிகுமாரி கேட்டுக்கொண்டார்.
இதேவேளை இந்த“ சொல்லை” திஸ்ஸக்குட்டியாராச்சி கூறியபோது, அது தொடர்பில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபைக்கு தலைமை தாங்கிய அஜித் ராஜபக்சவிடம் முறையிட்டபோதும் அவர், குறித்த சொல் தமக்கு தெளிவாகக் கேட்கவில்லை என்று குறிப்பிட்டதாக ரோஹினிகுமாரி குற்றம் சுமத்தினார்.
இதன்போதே சபாநாயகர் ஆசனத்தில் அமர்த்தும் தலைமை தாங்கும் சபைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் ஒருவரை நியமிக்கும்போது, விழிப்புலன் மற்றும் செவிப்புலன் தெளிவாக உள்ளவரை நியமிக்கவேண்டும் என்று லச்மன் கிாியெல்ல சபாநாயகாிடம் கேட்டுக்கொண்டார்.




உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 18 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
