நாடாளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய சாணக்கியன் விவகாரம்! சபாநாயகரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை(Video)
தமிழகத்தின் அரசியல்வாதி சீமான் போன்றே இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்(K.Thileeban) தொிவித்துள்ளார்.
விளைந்த நெல் வயலுக்குள் அவர் ஏர் பூட்டியதாக கூறியே குலசிங்கம் திலீபன் இதனை இன்று நாடாளுமன்றத்தில் தொிவித்தார்.
அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினா் சாணக்கியனின் முதல் பெயரை முகமது சாணக்கியன் என்று குலசிங்கம் திலீபன் இரண்டு தடவைகளாகக் குறிப்பிட்டபோது, குறுக்கிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன், சாணக்கியனின் முதல் பெயரை மாற்றியமைத்தமை, சபையை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டார்.
படிக்காதவரான இந்த நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபனை திருத்த முயற்சிக்கவேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் குலசிங்கத்தின் இந்த உரையை நாடாளுமன்ற பதிவுப் புத்தகமான ஹன்சாட்டில் இருந்து நீக்கவேண்டும் என்றும் ஸ்ரீதரன் கோாிக்கை விடுத்தார்.
இதனை ஏற்ற சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினா், குறித்த உரைக் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு அவதுாறு ஏற்பட்டிருக்குமானால், நாடாளுமன்றப் பதிவுப்புத்தகம் (ஹன்சாட்டில்) இருந்து இதனை நீக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
