அமைச்சா் விமல் வீரவன்ச, ”தெக்கே மேன்”( இரட்டை மனிதன்). நாடாளுமன்றத்தின் இன்றைய முக்கிய உரைகள்.
opposition
parliment--budget-speech-
slogan
By Indrajith
அமைச்சா் விமல் வீரவன்ச, ”தெக்கே மேன்”( இரட்டைக் கொள்கைகளைக் கொண்ட மனிதர்) என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசிங்க தொிவித்துள்ளார். விமல் வீரவன்சக்கு இரண்டு கடவுச்சீட்டுக்கள், இரண்டு பிறப்புச்சான்றிதழ்கள், இரண்டு நாக்குகள், இரண்டு முகங்கள் உள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளார். பகலில் அரசாங்கத்தை விமா்சிக்கும் அவர் இரவில் அரசாங்கத்தை ஆதரிக்கிறார். எனவே அவர் பகலில் ”ஷொட்” இரவில் ”ஷேப்” கொள்கையைக் கொண்டவா் என்றும் இந்துனில் குறிப்பிட்டுள்ளார். |
உயிா்த்த ஞாயிறு தாக்குதல் தொடா்பில் அரசப் புலனாய்வுத்துறையின் தலைவர் மீது, அருட் தந்தை சிறில் காமினி குற்றம் சுமத்தியுள்ளார். எனவே அது தொடா்பில் ஆதாரத்தை அவா் வெளிப்படுத்தவேண்டும் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பொ்ணான்டோ கோாியுள்ளார். |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடா்பில் அருட்தந்தை சிறில் காமினியிடம் குற்றப்புலனாய்வுத்துறையினர் வாக்குமூலம் பெற்றமை தொடா்பில் அரசாங்கத்தின் மீது இன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினா் காவிந்த ஜெயரத்ன இந்தக் குற்றத்தை சுமத்தியுள்ளார். |
அரசாங்கத்தின் சேதனப்பசளைத் திட்டத்துக்கு சில அரச அதிகாாிகள், தமது பங்களிப்பை வழங்கவில்லை என்று ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தொிவித்துள்ளார். |
அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் 18 மாதங்களுக்குள் 3740 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொிவித்துள்ளாார். |
இலங்கையில் முன்னர் ஆட்சிப்புாிந்த ஆட்சியாளா்கள் நாட்டுக்கு சொத்துக்களை சோ்த்தனர். எனினும் தற்போது சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்படுவதாக அமைச்சா் சுசில் பிரேமஜயந்த தொிவித்துள்ளார். |
சரியானதை பிழையென்றும் பிழையானதை சரியென்றும் கூறும் எதிர்க்கட்சியையே இன்று காணமுடிவதாக அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார். |
தமிழ் மக்கள், சலுகைகளுக்காக சோரம் போகின்ற சமூகத்தினர் அல்லர் என்று நாடாளுமன்றத்தில் தொிவிக்கப்பட்டு்ள்ளது. எனவே காணாமல் போனவர்கள் தொடா்பில் இலங்கையில் நியாயப்பூர்வ தீா்வு கிடைக்கவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் கோரியுள்ளார். |
நாடாளுமன்றத்தில் வாய்மூலக் கேள்வியின்போது அரசாங்கக்கட்சியினருக்கு மாத்திரம் அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாகக் கூறி, இன்று நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினர், தமது ஆட்சேபனையை வெளியிட்டனா். இதன்போது அவா்கள் சபாநாயகரிடம் தமக்கு நீதிவேண்டும் என்று கோாிக்கை விடுத்தனா். |
நீதிமன்ற உத்தரவுகளைக் புறக்கணித்து, பொலிஸ் மா அதிபா், நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறியதாகக் கூறி, நாடாளுமன்றத்தில் இன்று எதிா்க்கட்சியினா் கோசங்களை எழுப்பினா்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுலோகங்களை ஏந்தி, ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும், அமைச்சா் சரத் வீரசேகரவுக்கும் எதிராகக் கோசங்களை எழுப்பினார். |
குத்தகை நிறுவனங்களும், காப்புறுதி நிறுவனங்களும் இன்று பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் மைத்ரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளாார். நாட்டின் கடன்களை செலுத்தமுடியாமல், அடகு வைத்த வீடுகளை மீட்கமுடியாமல் பலர் தமது உயிரைப் போக்கிக்கொள்ள முயன்றுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளார். |
எம்பிலிப்பிட்டியவில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆா்ப்பாட்டத்தின்போது, நேற்று இந்திக ஜெயரத்ன என்பவா் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று எதிர்கட்சியினா் இந்த குற்றத்தைச் சுமத்தினார். |
எம்பிலிப்பிட்டியவில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆா்ப்பாட்டத்தின்போது ஒருவா் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று பொதுப்பாதுகாப்பு அமைச்சா் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றத்தில் தொிவித்துள்ளாா். |
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சேதனப்பசளைக் கொள்கையை எதிர்க்கவில்லை. எனினும் 100 வீத சேதனப்பசளை நடைமுறையையே தாம், எதிர்ப்பதாக அமைச்சா் விமல் வீரவன்ச தொிவித்துள்ளார். விவசாய வணிகத்தில் இவ்வாறான முன்னெடுப்பை மேற்கொள்ளும் போது, விவசாய உற்பத்தித்துறையில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா். |




உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US