சாணக்கியன் ராசமாணிக்கம் முன்வைத்த யோசனைகள் வரவேற்கத்தக்கவை : டயானா கமகே
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் கடந்த வெள்ளிக்கிழமை சபையில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விவாதங்கள் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிகள் தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் விமர்சன ரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வரவு செலவுத் திட்டம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது கூறப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு இதோ,
நாடாளுமன்ற உறுப்பினா் இம்ரான் மஹ்ரூப் இலங்கை மக்களின் குரல் வளைகள் நசுக்கப்பட்டுள்ள நிலையில் செயற்கை சுவாவம் வழங்கப்படும் என்று மக்கள் நம்பினா். எனினும் அதனை வழங்கமுடியாது என்று பசில் ராஜபக்ச, தமது பாதீட்டின் மூலம் தொிவித்துள்ளாா். பசில் ராஜபக்சவுக்கு 7 அறிவு இருப்பதாக கூறியவா்களுக்கு எத்தனை அறிவு இருக்கின்றன என்பதை மக்கள் இந்த பாதீட்டின் மூலம் தொிந்துக்கொண்டனா் வயதான பெண் ஒருவரை அலங்காித்து மணப்பெண்ணாக காட்டும் பாதீடே பசில் ராஜபக்சவின் பாதீடாகும். |
நாடாளுமன்ற உறுப்பினா் டயானா கமகே பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினா் சாணக்கியன் ராசமாணிக்கம் நேற்று முன்வைத்த யோசனைகள் வரவேற்கத்தக்கவை. இதனை ஏனைய எதிா்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்களும் முன்மாதியாக எடுத்துக்கொள்ளவேண்டும். நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகம் இருக்கும் நிலையில் சமா்ப்பிக்கப்பட்டுள்ள பாதீடு, சிறப்பான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளது. |
