யாழ்ப்பாண மாநகரசபை சைக்கிளின் ஒரு சில்லு- கஜேந்திரகுமாரிடம், ஒரு சில்லு மணிவண்ணனிடம்
கடற்றொழில்களில் இருந்து தமிழர்களை அகற்றவேண்டும் என்றளவில் திட்டமிட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கிறது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிந்துக்கொண்டே இந்த தவறு செய்யப்படுவற்கு இடமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடற்றொழில் அமைச்சு தொடர்பான நாடாளுமன்ற நிதியொதுக்கீட்டு விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்
எனினும் இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கஜேந்திரன் வழமைப் போலவே பொய் மூடையை அவிழ்த்து விட்டுள்ளதாக தெரிவித்தார்.
தம்முடைய அரசாங்கம், இனவாதமற்ற கொள்கையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மாநகரசபையின் சைக்கிளில் ஒரு சில்லு கஜேந்திரகுமாரிடமும், ஒரு சில்லு மணிவண்ணனிடமும் உள்ளது. கைப்பிடி கஜேந்திரனிடம் இருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
