பசில் ராஜபக்ச, ஏன் இந்தியாவுக்கு சென்றார்?
இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தின் இருப்பு குறித்து இன்னும் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க, கடந்த வாரத்தில் மத்திய வங்கியில் இருக்கும் வெளிநாட்டு நாணய ஒதுக்கத்தின் பெறுமதி குறித்து தகவல் வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டபோதும், இன்னும் அது வெளியிடப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
நிதியமைப்பை ஒழுங்குப்படுத்தும் அமைப்பு நாடாளுமன்றம் என்பதால், வெளிநாட்டு நாணய ஒதுக்கம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு வெளிப்படுத்தப்படவேண்டும்.
இதனை விடுத்து இந்திய அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கம் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
இதேவேளை பாதீட்டு விவாதங்களுக்கு மத்தியில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் இல்லாமல், ஏன் இந்தியாவுக்கு சென்றார் என்று ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri