மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே நிறைவேற்று அதிகாரம் உண்டு : சுசில் பிரேமஜயந்த - செய்திகளின் தொகுப்பு
நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று (25) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தில் ஒரு பகுதியாகும்.
நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது. அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளமுடியாது.
அமைச்சரவையில் கலந்துரையாட முடியுமே தவிர தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது.
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. அந்த விடயம் தொடர்பாக 9 பேரினால் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |